அமெரிக்காவில் கஞ்சா வழக்கில் கைதான ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 1970 ஆம் ஆண்டு முதல் கூட்டாட்சி சட்டத்தின் கீழ் எந்தவொரு நோக்கத்திற்காகவும் கஞ்சாவைப் பயன்படுத்துவதும், வைத்திருப்பதும் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது.
எனினும் அமெரிக்காவில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் கஞ்சா பயன்படுத்தியதற்காக நாள்தோறும் ஏராளமான இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு இன்று (அக்டோபர் 7) பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கஞ்சா மீதான அமெரிக்க சட்டத்தின் அணுகுமுறையால், பலரின் வாழ்க்கை தொந்தரவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான அமெரிக்க இளைஞர்களின் வீடு, கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு உரிமைகள் பறிபோகிறது.
தவறான விஷயங்களை சரிசெய்ய வேண்டிய நேரம் இது. கஞ்சா வைத்திருந்ததற்காக மக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
கஞ்சாவை வெள்ளை மற்றும் கறுப்பின மக்கள் என அனைவரும் பயன்படுத்துகின்றனர். எனினும் கறுப்பின மக்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் கஞ்சா வழக்கில் கைதான ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கஞ்சா பயன்படுத்துவது தொடர்பாக கூட்டாட்சி சட்டத்தை விரைவில் மறுஆய்வு செய்ய கோரி சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகியோரை ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்ட முதல் ரக போதை பொருள் பட்டியலில் கஞ்சா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் அபேஸ்!
ராக்கெட் ராஜா திருவனந்தபுரத்தில் கைது!