அமெரிக்க சிறப்பு விசாரணை குழு இந்த வாரம் டெலாவேரில் உள்ள ஜோ பைடனின் வீட்டில் நடத்திய சோதனையில் ஆறு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஜோ பைடனின் வழக்கறிஞர் பாப் பாயர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை துணை ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் அரசின் ரகசிய ஆவணங்களை பதுக்கியதாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமெரிக்க சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2024-ஆம் ஆண்டில் ஜோ பைடன் அமெரிக்க தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சோதனை அவருக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை அதிகாரிகளின் சோதனை குறித்து பைடனின் வழக்கறிஞர் பாப் பாயர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வாஷிங்டனில் உள்ள பைடன் அலுவலகத்திலும் டெலாவேரில் உள்ள அவரது வீட்டிலும் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அரசின் 6 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை 2009-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பைடன் துணை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உள்ள ஆவணங்கள் ஆகும்.
இந்த சோதனையானது 12 மணி நேரம் நடைபெற்றது. விசாரணை அதிகாரிகளுக்கு சோதனை நடத்த முழு அனுமதி வழங்கப்பட்டது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க அதிபர் வீட்டில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
வேலைவாய்ப்பு : எல்.ஐ.சி நிறுவனத்தில் பணி!
அண்ணாமலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கே.பாலகிருஷ்ணன்