ஜவகர்ஹாலால் நேரு பல்கலைக்கழகத்தின் சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதைத் தொடர்ந்து, வளாகத்தின் அனைத்து மையங்களிலும் கேமரா பொருத்தப்படும் என்று பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி டெல்லி – ஜவகர்ஹாலால் நேரு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
அதில், பிராமணர்கள் மற்றும் பனியா சமூகத்தை சேர்ந்தவர்கள் வளாகத்தையும் நாட்டையும் விட்டு வெளியேறுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது இடதுசாரி மாணவர்கள் சங்கம் என்று ஏபிவிபி அமைப்பு குற்றம்சாட்டியது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில், ஆறு அம்ச அறிவுரைகளை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ பண்டிட் வழங்கியுள்ளார்.
அதன்படி, பல்கலைக்கழகத்தில் இனி ஒரே ஒரு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மட்டுமே இருக்கும்.
பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பல்கலைக்கழக வளாகத்தில் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
ஆணாதிக்கம் நிறைந்ததா கட்டா குஸ்தி: ஒரு பார்வை!
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை தோலுரிக்கும் விட்னஸ்: டிசம்பர் 9 ரிலீஸ்!