ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான மூன்றாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரை 65.48% வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டமாக நடந்து வருகிறது. செப்டம்பர் 18 அன்று நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 61.38% வாக்குகள் பதிவாகின.
செப்டம்பர் 26-ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளில் 57.31% வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இதில் 415 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், முதல் முறையாக மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் இந்த தேர்தலில் முதன் முறையாக வாக்களித்துள்ளார்கள்.
வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை கம்பெனிகள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் தான் மாலை ஐந்து மணி வரை 65.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்பாக மதியம் 1 மணி வரை 44 சதவீதமும், 3 மணி வரை 56 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது.
அதிகபட்சமாக சம்ப் சட்டமன்ற தொகுதியில் 77.3% வாக்குகளும், குறைந்தபட்சமாக சோபோர் சட்டமன்றத் தொகுதியில் 41.44 % வாக்குகள் பதிவானது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரஜினிக்கு என்னாச்சு? – அப்பல்லோ மருத்துவமனை ஹெல்த் ரிப்போர்ட்!
எடப்பாடி மீது பறந்து வந்து விழுந்த செல்போன்… ஆவேசமடைந்த அதிமுகவினர்!
7 மாவட்டங்களில் மழை : வானிலை எச்சரிக்கை