ஜம்மு காஷ்மீரில் உள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று(செப்டம்பர் 25) காலை முதல் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கான சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி செப்டம்பர் 18ஆம் தேதி 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 61.13 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில், 26 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடந்து வருகிறது.
இதில் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா வேட்பாளராகப் போட்டியிடும் காந்தர்பல் மற்றும் பட்கம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
1 மணி நிலவரம்
இந்த நிலையில் மதியம் ஒரு மணி வரை 36.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக குலாப்கர் சட்டமன்றத்தில் 53.94 சதவீதமும் குறைந்த பட்சமாக ஹப்பகடல் தொகுதியில் 11.14 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ” ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு, மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்காவிட்டால், இந்தியா கூட்டணி வீதியில் இறங்கிப் போராடும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக காலை 11 வரை 24.10% வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
காலை 9 மணிக்கு வர சொன்ன ரஜினி… 7 மணிக்கே ஆஜரான புகழ்
ஜெயம் ரவி என்னுடைய கிளையன்ட் அவ்வளவுதான்- கொந்தளித்த கென்னிஷா