சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ நிறுவனம் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி, 3000 ரூபாய் மதிப்புள்ள பலன்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
கேஷ்பேக் தொகை நெட்மெட்ஸ், ஏஜியோ, இக்சிகோ அல்லது 75 ஜிபி 4ஜி டேட்டா வடிவில் வழங்கப்படுகிறது. இதற்கான ஆஃபர் கூப்பன்கள் பயனர்களின் மைஜியோ செயலியில் ரிசார்ஜ் செய்த 72 மணி நேரத்தில் கிரெடிட் செய்யப்பட்டு விடும். சுதந்திர தினத்தை ஒட்டி இந்த சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. இதில் வழங்கப்படும் வவுச்சர்களை மைஜியோ செயலியின் வவுச்சர் பகுதியில் பெற முடியும்.
இந்த பிளானில் வாடிக்கையாளர்கள் ஒரு ஆண்டுக்கு தினமும் 2.5GB டேட்டா பயன்படுத்த முடியும். 2.5GB டேட்டா முடிந்தபின் 64kbps வேகத்தில் டேட்டா பயன்படுத்தலாம். இதுபோக தினமும் 100 SMS அனுப்பலாம். ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் உள்ளிட்ட ஜியோ சூட் வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்துடன் 25 சதவீத தள்ளுபடி வழங்கும் மூன்று நெட்மெட்ஸ் கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த கூப்பன்களை ரூ. 1000 அல்லது அதற்கும் அதிக தொகைக்கு செலவிடும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை கொண்டு அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும். இந்த கூப்பன்கள் நெட்மெட்ஸ் வலைதளம் மற்றும் செயலி என எதில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கூப்பன் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். இத்துடன் ரூ. 1000 மதிப்புள்ள ’ஏஜியோ தள்ளுபடி கூப்பன்’ வழங்கப்படுகிறது. இந்த கூப்பன் தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்து 990 மதிப்பிலான பொருட்களை வாங்கி இருக்க வேண்டும். அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி பெற முடியும். இந்த கூப்பன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திருப்பதி: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் யாத்திரையை ஒத்திவைக்க அறிவுறுத்தல்!