ஜார்க்கண்ட் தேர்தல் : 11 மணி நிலவரம்!

Published On:

| By Minnambalam Login1

jharkhand election 11 am update

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று(நவம்பர் 13) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் இன்றும் நவம்பர் 20ஆம் தேதியும் நடைபெறும். முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 9 மணி வரை 13.4 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் 11 மணி வரை 29.3% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக 25 தேர்தல் வாக்குறுதிகள் அளித்திருந்த நிலையில், காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி கல்வி, குடியுரிமைக் கொள்கை, சமூக நீதி, உணவு, மைய்ய சம்மான் யோஜனா, வேலைகள் மற்றும் விவசாயிகள் நலன் ஆகிய துறைகள் தொடர்பான 7 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க, ஜார்க்கண்ட் ஆளுங்கட்சியான ஜேஎம்எம்-இன் கோட்டையாக கருதப்படுகிற கொல்ஹன் பகுதியில் வெற்றிபெறுவதற்காக, தாங்கள் வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டத்தில் இருந்து மலைவாழ் மக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

முன்னதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் தற்போது பாஜக கட்சி சார்பாக செரைகேலா தொகுதியில் போட்டியிடும் சம்பாய் சோரன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் ” கொல்ஹன் பகுதியில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என்று கூறினார். இவருக்கு எதிராக ஜேஎம்எம் கட்சி சார்பாக கணேஷ் மஹாலி போட்டியிடுகிறார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பூசாரி தற்கொலை வழக்கு : ஓபிஎஸ் தம்பி விடுதலை!

114 அடி உயரத்தில் வளர்ந்து நிற்கும் பிரமாண்ட சேவல்… என்ன காரணம்?