ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வின் தேர்வு முடிவுகள் இன்று (பிப்ரவரி 7) வெளியானது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், தேசிய தொழில்நுட்ப கழகம், இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் என்று இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வானது நடைபெறுகிறது.
2023-ஆம் கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் நேற்று வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் இன்று ஜேஇஇ தேர்வு முதல் அமர்வின் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை jeemain.nra.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஜேஇஇ தேர்வின் இரண்டாம் அமர்வின் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்விற்காக மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: சோயா உப்புமா!