2022-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளை பாம்பே ஐ.ஐ.டி இன்று (செப்டம்பர் 11) வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி களில் சேர்வதற்கு ஜே.இ.இ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது, ஜெ.இ.இ மெயின் மற்றும் ஜெ.இ.இ அட்வான்ஸ்டு என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
ஜெ.இ.இ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெ.இ.இ அட்வான்ஸ்டு தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள். ஜெ.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் ஜுலை 11ஆம் தேதி வெளியானதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஜெ.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
இன்று (செப்டம்பர் 11) காலை 10 மணியளவில், jeeadv.ac.in என்ற இணையதளத்தில், பாம்பே ஐ.ஐ.டி, ஜெ.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
அதன்படி, ஐஐடியில் சேர்வதற்கான ஜெ.இ.இ அட்வான்ஸ்டு தேர்வை, 1,55,538 பேர் எழுதினர். இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற 40,712 பேரில் 6,516 பேர் பெண்கள் ஆவர்.
கடந்த ஆண்டு ஜெ.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு எழுதியவர்களில், 30 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 26.17 சதவிகிதமாக தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது.
செல்வம்
நாட்டின் சிறந்த உயிரியல் பூங்கா: வண்டலூர் முதலிடம்!