ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 134 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1889  ஆம் ஆண்டு பிறந்த ஜவஹர்லால் நேரு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் முதல் பிரதமரானவர்.

சுதந்திரப் போராட்ட வீரர், காங்கிரஸ் தலைவர், நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என பல சிறப்புகளைக் கொண்ட நேருவின் 134 ஆவது பிறந்தநாள் இன்று(நவம்பர் 14) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வனத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “நவீன இந்தியாவை உருவாக்கியவர் நேரு. அவரது மகத்தான பங்களிப்பு இல்லாமல் 21ம் நூற்றாண்டின் இந்தியாவை கற்பனை செய்து பார்க்க முடியாது. “ஜனநாயகத்தின் வெற்றியாளரான அவரது முற்போக்கு சிந்தனைகள், சவால்கள் இருந்தபோதிலும் இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது. உண்மையான தேசபக்தருக்கு எனது பணிவான வணக்கம்,” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது பிறந்தநாளில், நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஜிக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேருவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னையில், கிண்டி கத்திபாராவில் உள்ள ஜவஹர்லால் நேருவின் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அமைச்சர்களான தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கலை.ரா

மாணவரின் உயிரை காவு வாங்கிய படி பயணம்!

“வடிகால் வசதி சீரமைக்கப்பட்டதா?”: கடலூரில் முதல்வர் ஆய்வு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts