இந்தியாவில் வளர்க்கப்படும் ஜப்பான் வயலட் அரிசி… பின்னணி என்ன?

Published On:

| By Kumaresan M

voilet rice

இந்தியாவில் ஜப்பான் நாட்டின் பிரசித்தி பெற்ற வயலட் வண்ணத்திலான அரிசி விளைவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக கேரளாவில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு அரிசி ரகங்கள் பரிச்சாத்திய முறையில் விளைவிக்கப்படுகிறது. அந்த வகையில், சோக்குவா அரிசி என்றழைக்கப்படும் ஒரு ரக அரிசி பாலக்காட்டில் விளைவிக்கப்பட்டது. இந்த அரிசியை சாதாரண அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்தாலே, அது சாதமாக மாறிவிடுமாம். இந்த ரக அரிசியை போகா சால் (Boka Saul) அரிசி என்றும் அழைப்பதுண்டு. இந்த மேஜிக் அரிசி அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினரால் உணவுக்காக விளைவிக்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அரிசி கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் விளைவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜப்பான் நாட்டின் வயலட் அரிசி குட்டநாடு அருகேயுள்ள நீரானம் என்ற இடத்தில் விளைவிக்கப்பட்டுள்ளது. 110 நாட்களில் இந்த அரிசி விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிரில் பூச்சி தாக்குதலும் குறைவாகவே இருக்கும். அதிக ஈரப்பதம் கொண்ட நிலத்தில் இந்த அரிசி கூடுதல் விளைச்சலை கொடுக்கிறது. ஒரு ஏக்கருக்கு 25 குவிண்டால் அரிசி விளைச்சல் கிடைக்கிறது. சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரிசி புற்று நோய் வராமல் தடுக்கும். தோல் மற்றும் கண்களுக்கு நல்லது. கூடுதல் நார்ச்சத்து கொண்டது. அதிக புரதம் மற்றும் இரும்பு சத்து கொண்டது. இதயத்துக்கு நல்லதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

ஜப்பான் மக்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ இந்த ரக அரிசியே காரணமென்று கூறுகிறார்கள்.

கேரள மாநிலத்தில் குட்டநாடு பகுதி என்பது நமது டெல்டா மாவட்டங்கள் போன்ற பகுதியாகும். ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா பகுதிகளில் குட்டநாடு பகுதி பரவிக் கிடக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share