Japan Plan to Release radioactive water in the sea

கதிரியக்க நீரை கடலில் கலக்கும் ஜப்பான்: எதிர்க்கும் சீனா!

இந்தியா

ஜப்பானில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின்  கதிரியக்க நீரை கடலில் விடும் ஜப்பானின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20,000-க்கு அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இந்தப் பேரிடரில் மாயமான 1000-க்கும் அதிகமானவர்களை தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் ஃபுகுஷிமா அணுமின் நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் அழிக்கப்பட்ட அணு உலையில் இருந்த எரிபொருட்களுடன் தொடர்புடைய கதிரியக்க தன்மையுடைய மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்கும் முயற்சியில் ஜப்பான் கடந்த சில ஆண்டுகளாகாக இறங்கியது.

அவ்வாறு சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை ராட்சத தொட்டிகளில் ஜப்பான் சேகரித்து வைத்துள்ளது.

தற்போது சுமார் 1.3 மில்லியன் டன் அளவிலான சுத்தம் செய்யப்பட்ட கதிரியக்க நீரை தொட்டிகளில் ஜப்பான் சேகரித்து வைத்திருக்கிறது.

இதில், முதற்கட்ட அளவிலான தண்ணீரை பசிபிக் கடலில் கலக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

ஜப்பானின் இந்த முடிவுக்கு அண்டை நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, “ஜப்பான் தண்ணீரைக் கடலில் திறந்தால் கடலின் தன்மையும், கடல் உணவும் பாதிக்கப்பட்டு எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்” என்று தென்கொரியா கூறி வருகிறது.

சீனாவும் ஜப்பானின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் ஜப்பானின் 10 மாகாணங்களிலிருந்து உணவை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது.

ஆனால், ஜப்பானோ , சுத்திகரிக்கப்பட்ட நீரில் 80 சதவிகிதம் கதிரியக்க தன்மை நீங்கிவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் ஜப்பானிய அரசாங்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, இம்மாத பிற்பகுதியில் கடலில் வெளியிட போவதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஆகியோருடன் அடுத்த வாரம் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அமெரிக்காவில் தனது சந்திப்புகளை முடித்த பிறகு,

சுமார் 1.3 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியிடுவதற்கான செயல்முறை தொடங்கும் என்றும், இரு நாட்டு தலைவர்களுக்கும் நீர் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: முளைப்பயிறு சப்பாத்தி!

ஆன்லைன் ரம்மி… திறமைக்கான விளையாட்டாக கருத முடியாது: தமிழக அரசு!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *