வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 6பேர் பலி!

இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இந்தோ திபெத்தியன் எல்லைக் காவல் படை வீரர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் பகல்ஹம் மலைப் பகுதியில் அம்மாநிலத்தைச் சேர்ந்த 2 காவல் துறை அதிகாரிகளுடன் 37 பேர் அமர்நாத் யார்த்திரைக்கான பணியை முடித்துவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். சந்தன்வாரியில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் பேருந்து சென்று கொண்டிருந்தது. ஃப்ரிஸ்லன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் வீரர்கள் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரியா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *