டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 14) சோதனை செய்து வருகின்றனர்.
காலை 11.30 மணியில் இருந்து டெல்லி கஸ்தூரி பாய் காந்தி மார்க் பகுதியில் அமைந்திருக்கும் பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.
அங்கு பணியாற்றும் ஊழியர்களுடைய செல்போன்கள் வருமான வரித்துறை ஊழியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பிபிசி நிறுவனம் மோடி குறித்த ஆவணப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
”வேலன்டைன்ஸ் டே” கொண்டாடும் கூகுள்
போலி பத்திரப்பதிவு: வழக்கு நிலுவையில் இருந்தாலும் புகார் அளிக்கலாம்!