கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அங்கு பாரத ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நவம்பர் 30-ம் தேதி அங்குள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அதன் முடிவுகள் இன்று (டிசம்பர் 3) வெளியாகின்றன. தொடர்ந்து 2 முறை வென்று ஆட்சி கட்டிலில் அமர்ந்த சந்திரசேகர் ராவ் 3-வது முறையாக அங்கு ஆட்சி அமைப்பாரா? என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதற்கான விடை இன்று (நவம்பர் 3) தெரிந்து விடும்.
தெலங்கானாவை பொறுத்தவரை அங்கு ஆளும் கட்சியான பாரத ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ், பாஜக என மூன்று கட்சிகளுக்கும் இடையில் மும்முனை போட்டி நிலவுவது போல தெரிந்தாலும் உண்மையில் அங்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி – காங்கிரஸ் இடையில் தான் போட்டி நிலவுகிறது.
இந்த மூன்று கட்சிகளை தவிர அசாதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியும் சில தொகுதிகளில் வெற்றிவாகை சூட வாய்ப்புகள் இருக்கிறது. தெலங்கானாவை பொறுத்தவரை அங்கு தலித், ஓ.பி.சி, பழங்குடி மற்றும் இஸ்லாமியர் ஆகிய 4 சமூகத்தை சேர்ந்த மக்கள் அங்கு பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
அதாவது மொத்த மக்கள் தொகையில் இவர்கள் தான் 85% இருக்கின்றனர். இதனால் அங்கு வெற்றிவாய்ப்பை தீர்மானிக்க போகும் வாக்குகள் இவர்களுடையதாகவே இருக்கும். மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் கட்சி தான் தெலங்கானாவில் ஆட்சிக்கு வரும்.
அதன்படி அங்கு வெற்றிவாகை சூடப்போவது பாரத ராஷ்ட்ரிய சமிதியா? இல்லை காங்கிரஸா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
அமலாக்கத்துறை அதிகாரி கைது: அரசியல் தலைவர்கள் ரியாக்ஷன்!
புரோ கபடி லீக் இன்று தொடக்கம்…கோப்பையை தட்டி தூக்குமா தமிழ் தலைவாஸ்?