சந்திரயான் 3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக LVM3 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 வெற்றிகரமாக கடந்த 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் பூமியின் தரைபரப்பில் இருந்து 170கி.மீ நீள்வட்டப்பாதையில் சந்திரயான் 3 நிலைநிறுத்தப்பட்டது.
இந்த நீள்வட்டபாதையில் இருந்து நெடுந்தொலைவுக்கு தள்ளிவிட்டால் தான் விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
அதன்படி சந்திரயான் 3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர்.
இதன்மூலம் பூமியின் தரைபரப்பில் இருந்து 173 கி.மீ உயரத்தில் நீள்வட்டப்பாதையில் சந்திரயான் 3 நிலைநிறுத்தப்பட்டது.
பூமிக்கும் நிலவுக்கும் இடையே சுமார் 4 லட்சம் கி.மீ தூரம் இடைவெளி உள்ளது. இந்நிலையில், ஏவப்பட்டுள்ள சந்திரயான் 3 விண்கலம் தற்போது 41,762 கி.மீ தூரத்தில் உள்ளது.
சந்திரயான் விண்கலம் தற்போது சீரான நிலையில் பயணித்து கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் வருகிற ஜூலை 18,20 மற்றும் 25ஆம் தேதிகளில் சந்திரயான் 3 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை அடுத்தடுத்து உயர்த்தப்படும்.
அப்போது பூமியிலிருந்து சுமார் 1 லட்சம் கி.மீட்டர் தூரத்தில் சந்திரயான் பயணித்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக வரும் ஆகஸ் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை சந்திரயான் விண்கலம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
சரிந்து வரும் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி: காரணம் என்ன?