நிலவில் தரையிறங்கியுள்ள லேண்டரில் இருந்து ரோவர் பிரிந்து சென்ற வீடியோவை இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 25) எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்தது.
லேண்டர் நிலவில் தரையிறங்கியதை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட அதே நேரத்தில் உலக நாடுகளின் ஒட்டுமொத்த பார்வையும் இந்தியாவின் சாதனையைத் தான் உற்றுநோக்கியது.
நிலவில் தரையிறங்கிய லேண்டர் நிலவின் புகைப்படங்கள் மற்றும் பிரக்யான் ரோவரின் புகைப்படங்களை பகிர்ந்திருந்தது. பின்னர் லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் நிலவில் தனது பணியைத் தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்திருந்தது.
இந்நிலையில் லேண்டரில் இருந்து ரோவர் பிரிந்து சென்ற போது எடுத்த வீடியோவை இஸ்ரோ இன்று பகிர்ந்துள்ளது. ”சந்திரயான் 3 ரோவர் லேண்டரிலிருந்து நிலவின் மேற்பரப்புக்கு எப்படி சென்றது என்பது இங்கே” என்று பதிவிட்டு எக்ஸ் பக்கத்தில் வீடியோவையும் பகிர்ந்துள்ளது.
… … and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W
— ISRO (@isro) August 25, 2023
அந்த வீடியோவில் ரோவர் நிலவில் இறங்கி செல்வது தெளிவாக பதிவாகியிருக்கிறது. மேலும் இஸ்ரோ ஏற்கனவே சொல்லியிருந்தபடியே ரோவரின் ஒரு பக்க சக்கரத்தில் இஸ்ரோ லோகோவும் மற்றொரு பக்க சக்கரத்தில் தேசிய சின்னமும் இருந்ததையும் காண முடிகிறது.
மோனிஷா
“ஜெயலலிதாவின் டிரைவரே இல்லை, சசிகலாவுக்குதான் டிரைவர்” -தனபால் புகாருக்கு கொந்தளித்த எடப்பாடி