36 செயற்கைகோள்களை தாங்கி செல்லும் எல்விஎம் 3 எம் 3 ராக்கெட் இன்று (மார்ச் 26) காலை 9 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இங்கிலாந்தின் ஒன் வெப் நிறுவனத்துடன் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதற்காக 72 செயற்கைகோள்கைகளை புவி வட்டப்பாதையில் செலுத்துவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இந்தநிலையில் மீதமுள்ள 36 செயற்கைகோள்களை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.
அதிக எடையை தாங்கி செல்லும் எல்விஎம் 3 எம் 3 ராக்கெட் 36 செயற்கைகோள்களுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 9 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
எல்விஎம் 3 எம் 3 ராக்கெட் 43.5 மீ உயரமும், 643 டன் எடையும் கொண்டது.
36 செயற்கை கோள்களின் மொத்த எடை 5.8 டன் ஆகும். ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்காக நேற்று காலை 8.30 மணி முதல் கவுண்டவுன் துவங்கப்பட்டு ராக்கெட்டில் எரிபொருள் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
செல்வம்
இ-சேவை மையங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!
திருப்பதி பக்தர்கள் தரிசனம்: டிக்கெட்டுகள் நாளை வெளியீடு!