36 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்!

இந்தியா

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 36 செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் வெற்றிகரமாக இன்று (அக்டோபர் 23) அதிகாலை விண்ணில் பாய்ந்தது.

அறிவியல், தொழில்நுட்பம், புவியியல், வானிலை, ஆராய்ச்சி வணிகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இஸ்ரோ விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறது.

அந்த வகையில் இஸ்ரோ, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைக்கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் இன்று செலுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 12.07 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று (அக்டோபர் 22) நள்ளிரவு 12.07 மணிக்குத் தொடங்கியது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் சுமார் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளைக் கொண்ட ராக்கெட்டாகும்.

ஒன்வெப் நிறுவனமானது உலக நாடுகளுக்கு அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

மேலும், இஸ்ரோ வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது.

மோனிஷா

இந்தியா பாகிஸ்தான் : புள்ளிவிவரம் லிஸ்ட் இதோ!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *