இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில், பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் கட்சி இன்று (அக்டோபர் 9) தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
5 மாநில தேர்தலை முன்னிட்டு இன்று டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், கூடிய இந்த கூட்டத்தில் முக்கியத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த போர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நில உரிமை, கண்ணியம், மரியாதைக்காக போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு எப்போதும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். எந்தவொரு வன்முறையும் ஒருபோதும் தீர்வை கொடுக்காது. இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையேயான போர் நிறுத்தப்பட வேண்டும். அமைதி உருவாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
“போய் ஆஸ்கர் கொண்டு வா” ரஜினியிடம் வாழ்த்து பெற்ற இயக்குனர்!