உயிர் போகும் தருவாயில் ஹமாஸ் தலைவர் கட்டை விரலை துண்டித்த இஸ்ரேல்!- பின்னணி என்ன?

இந்தியா

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகு, அந்த அமைப்பு பலவீனமடைந்துள்ளது. தொடர்ந்து,  இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படை தலைவர் யஹ்யா சின்வாரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. நேற்று காலை காசாவில் ஒரு இடத்தில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் படைக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த ஹமாஸ் படை அங்கிருந்த 3 இஸ்ரேல் வீரர்களை நோக்கித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் அந்த கட்டிடத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் படையினர் உள்ளே சென்று பார்த்த போது, கட்டிடத்தினுள் ஹமாஸ் படையின் தலைவரான சின்வார் கொல்லப்பட்டு கிடந்தார்.  சோபாவில் இருந்த படி அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  காட்சியை வீடியோ எடுத்த இஸ்ரேல் படையினர் அதை  வெளியிட்டுள்ளனர்.

எனினும் இறந்தது சின்வார் தானா அல்லது அவரை போலவே உள்ள நபரா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் , அவரது ஆள்காட்டி விரலை துண்டித்து இஸ்ரேல் ராணுவம் எடுத்து சென்றது. தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் டிஎன்ஏ சோதனை நடத்தியதில் கொல்லப்பட்டது சின்வார்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

சின்வார் ஏற்கனவே பல முறை இஸ்ரேல் சிறையில் இருந்துள்ளார்.  அப்போது சேகரிக்கப்பட்ட அவரது டிஎன்ஏ மற்றும் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு கொல்லப்பட்டது சின்வார் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு  சின்வார்தான் மூளையாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 45% வாக்குவங்கி 20%-ஆக குறைந்தது ஏன்? எடப்பாடிக்கு ஓபிஎஸ் கேள்வி!

ஈஷாவுக்கு எதிரான ஆட்கொணர்வு மனு: முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *