தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய சுரங்கத்திற்குள் சொகுசு படுக்கைகள், ஏகே 47 துப்பாக்கிகள், இரு சக்கர வாகனங்கள், சாப்பிடும் அறை, ஜெனரெட்டர்கள் உள்ளிட்டவை இருப்பதாக இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டுக்கும் ஈரான் நாட்டு ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் மோதல் நடந்து வருகிறது. சமீபத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்தது. இதனால், ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மத்திய தரைக்கடல் பகுதி பரபரப்பானது.
இதற்கிடையே, லெபனான் நாட்டில் உட்புகுந்து தரைப்படையினரை கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது, ஹிஸ்புல்லா அமைப்பினரின் சுரங்கத்தை இஸ்ரேல் ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.
சுரங்கத்திற்குள் ஏகே 47 துப்பாக்கிகள், படுக்கைகள் , தண்ணீர் கேன்கள் ஜெனரேட்டர் , பைக்குகள் போன்றவை இருந்தன. ஏராளமான பேக் செய்யப்பட்ட உணவு பொருள்களும் பங்கருக்குள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பங்கருக்குள் யாரும் இல்லை. கை விடப்பட்ட பங்கராக அது காட்சியளித்தது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலில் ஒரு வார விடுமுறை காலமான sukkot காலம் தொடங்கியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் இஸ்ரேலிய மக்கள் ஆடிப்பாடி மகிழ்வார்கள். 7 நாட்களும் பிடித்த உணவுகளை சாப்பிட்டு உற்சாகமாக இருப்பார்கள். யூத இன மக்கள் ஜெருசலேம் சென்று வழிபடுவதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
ஆனால், தற்போது ஈரான் நாடு இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் இருப்பதால் எப்போது வேண்டுமென்றாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற நிலை அங்கு உருவாகியுள்ளது. இதனால், அமெரிக்கா தனது அணுஆயுத விமானம் தாங்கிக் கப்பலான ஆபிரஹாம் லிங்கனை இஸ்ரேல் பாதுகாப்புக்காக அனுப்பியுள்ளது. இஸ்ரேலை ஒட்டியுள்ள அரபிக் கடலில் ஆபிரஹாம் லிங்கன் கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வாய்க்கு பூட்டு மும்பைக்கு ஜூட்… பாடகி சுசித்ரா திடீர் முடிவு!
எடப்பாடிக்கு ஷாக் விடியல்… மழைப் பணிகளை பட்டியலிட்ட அமைச்சர் நேரு
+1
+1
+1
+1
1
+1
+1
+1