israel pm Benjamin netanyahu phone call with pm modi

”நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்”: இஸ்ரேல் பிரதமருடன் பேசிய மோடி

இந்தியா

ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தன்னை அழைத்து பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 10) தெரிவித்துள்ளார்.

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஒருங்கிணைந்த தாக்குதல் தொடங்கியதுமே பிரதமர் மோடி தனது கண்டனத்தை தெரிவித்தார்.

அப்போது அவர் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், “இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய செய்தியால் இந்தியா ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளது.

எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நான்காவது நாளாக போர் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 1,500ஐத் தாண்டியுள்ளது.

குறிப்பாக இஸ்ரேலில் காசா எல்லைக்கு அருகே நடைபெற்ற இசை விழாவில் ஹமாஸ் ஆயுதப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த போர் தாக்குதலில் இஸ்ரேலின் கை ஓங்கி காணப்படும் நிலையில், இதுவரை காசாவில் இருந்து 1,87,500 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி வாயிலாக கள நிலவரத்தை பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,

“ தொலைபேசி அழைப்பு வாயிலாக தற்போதைய நிலைமையை வழங்கியதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுக்கு நன்றி. இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறார்கள். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ள்ளர்.

 

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

“லியோ”விற்கு 13 கட்டுகள்.. வைரலாகும் சென்சார் சான்றிதழ்!

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை… அதிமுகவிற்கு திடீர் பாசம்: முதல்வர் ஸ்டாலின்

ராஜமௌலி படத்தில் வில்லியாக காஜல் அகர்வால்

“ஆ.ராசாவின் 15 சொத்துகள் பறிமுதல்” : அமலாக்கத் துறை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

1 thought on “”நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்”: இஸ்ரேல் பிரதமருடன் பேசிய மோடி

  1. வணக்கங்க நெந்தம்பாக்கு ஐயா, எப்படியாச்சும் போரை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வாங்கய்யா, அங்க எங்க நாட்டுக்கு படியளக்குற மகராசன் துறைமுகம் இருக்காமே, அதுக்கு எதும் பிரச்னை வந்துரக்கூடாதுனு எங்க ஜி ராப்பகலா அன்னந்தண்ணி புளங்காம, தூக்கம் இல்லாம தவிச்சுகிட்டு இருக்காக ஐயா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *