சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

Published On:

| By Selvam

சிரியாவின் மத்திய தரைக்கடல் துறைமுக நகரமான டார்டஸ் அருகே இஸ்ரேல் இன்று (மார்ச் 4) வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சிரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகருக்குள் போராளி குழுக்கள் நுழைந்ததால் அந்த நாட்டு அதிபர் அல் ஆசாத் தப்பி ஓடி விட்டார். Israel launches air attacks

அல் அசாத் வெளியேற்றப்பட்ட பிறகு, இஸ்ரேல் சிரியாவிற்குள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் உள்ள இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்குள் தங்களது படைகளை அனுப்பியுள்ளது. இது 1974 ஆம் ஆண்டு சிரியாவுடனான இராணுவ விலகல் ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கையாகும். சிரியாவின் பல பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும் இராணுவ தளங்கள் மீது தொடர்ச்சியான குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தநிலையில், சிரியாவின் மத்திய தரைக்கடல் துறைமுக நகரமான டார்டஸ் அருகே இஸ்ரேல் இன்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்தின் சொந்த ஊரான டார்டஸ் துறைமுகம் அருகே ஆயுத கிடங்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக சிரிய அரசு செய்தி நிறுவனமான சனா, “டார்டஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. சிவில் பாதுகாப்பு மற்றும் சிறப்பு குழுக்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது. Israel launches air attacks

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share