இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எம்.பியை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் இந்திய தூதரகம் தீவிரம் காட்டி வருகிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல நூற்றாண்டுகளாக அவ்வப்போது போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் மோதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஸாவை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நேற்று காலை முதல் திடீர் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.
அவர்களை எதிர்த்து தெற்கு இஸ்ரேலின் தெருக்களில் இஸ்ரேலியப் படைகள் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இரண்டாவது நாளாக இன்றும் தொடரும் தாக்குதலில் இருதரப்பிலும் இதுவரை சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சம்பந்தப்பட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
இஸ்ரேலில் மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர் என சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அவர்களை அறிவுறுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இந்த நிலையில், மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., வான்வீரோய் கர்லுகி மற்றும் அவரது குடும்பத்தினரும் போர் தாக்குதல் நடந்து வரும் இஸ்ரேலில் சிக்கியுள்ளனர்.
என்.டி.டிவியின் அறிக்கையின்படி, இஸ்ரேலுக்கு புனித யாத்திரைக்காக ஜெருசலேம் சென்ற எம்.பி. கர்லுகி மற்றும் அவரது குடும்பத்தினரும் மொத்தம் 24 இந்தியர்களும் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இஸ்ரேலில் சிக்கியுள்ள ராஜ்யசபா எம்.பி உட்பட அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதன்படி புனித யாத்திரை சென்ற எம்பி கர்லுகி, அவரது குடும்பத்தினர் மற்றும் பிற இந்தியர்கள் இன்று எகிப்துக்கு இந்திய தூதரகம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட உள்ளார்கள்.
மேலும் இஸ்ரேலில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்ற பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா தற்போது பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsAUS: மீண்டும் மைதானத்தில் நுழைந்த யூடியுபர் அலப்பறை.. வைரல் வீடியோ!