காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122 போ் பலியாகியுள்ளனர்.
காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனா். அந்த மோதலின் உச்சகட்டமாக, இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ஆம் தேதி சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்திய அவா்கள், அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான்வழியாக நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், சுமாா் 250 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.
அதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப் போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122 போ் பலியாகியுள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 256 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் கடந்த அக்டோபர் 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 22,722 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்வீசில் இதுவரை 58,166 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர், காஸா நகரில் உள்ள ஒரு பகுதியை தங்கள் படைகள் சோதனை செய்ததாகவும். அதில் இருந்து கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சண்டே ஸ்பெஷல்: இந்த சீசனுக்கு எந்தெந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்?