டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு பின்னால் நேற்று மாலை 5 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் சிறப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் கை நிர் கூறும்போது, “மாலை 5.08 மணியளவில் தூதரகம் அருகே குண்டு வெடித்தது. இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேல் தூதரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாகன நெரிசல்: ஆற்றில் காரை இயக்கிச் சென்ற சுற்றுலாப் பயணி!