பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காசா பகுதியை கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இன்று (அக்டோபர் 9) அறிவித்தார்.
இஸ்ரேல் – பாலஸ்தீன குழுக்களுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ’அபரேகப் அல் அக்சா பிளோட்’ என்ற பெயரில் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அதிகாலை இஸ்ரேல் மீது காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதக்குழு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரம் ஏவுகணைகளை ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது ஏவியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் முதல் சாதாரண மக்கள் வரை என அனைவர் மீதும் ஈவு இறக்கமின்றி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் மக்கள் ஏராளமானவர்களை ஹமாஸ் ஆயுதக்குழு பிணைக்கைதிகளாகவும் பிடித்து வைத்துள்ளது.
இதனிடையே இஸ்ரேல் போருக்கு தயாராக இருப்பதாக அறிவித்ததோடு பாலஸ்தீனத்தின் மீது பதில் தாக்குதலையும் நடத்தியது. போர் பதற்றத்தால் இஸ்ரேல் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் இருந்து மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து காசாவில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வெளியேறினர்.
இஸ்ரேல் மீதான பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, உக்ரைன், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அறிவித்தது.
இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் காசா பகுதியை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் அறிவித்துள்ளார்.
காசா பகுதிக்குள் உணவு, எரிபொருள், கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் காசா பகுதியில் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணிக்கு நம்பிக்கையை தந்த கார்கில் தேர்தல்!