இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மோதல் நடைபெற்று வரும் வேளையில் தெற்கு லெபனான் பகுதியிலுள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
”இஸ்ரேல் ராணுவத்தினர் உங்களின் கிராமங்கள் மற்றும் இருப்பிடங்கள் அருகிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் தங்குமிடங்களைக் குறிவைத்து வருகின்றனர்.
அதனால், மறு அறிவிப்பு வரும்வரை உங்களின் சொந்த பாதுகாப்புக்காக உங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என் எச்சரிக்கிறோம்” என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளார்.
பலமுனைப் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், பாலஸ்தீனின் காஸாவுக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
நேற்று இஸ்ரேலிய அதிகாரிகள் காஸா அருகிலுள்ள ஷேக் ரவடான், தெற்கு ஜபாலியா முகாமிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலில் ராணுவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
எதிரிகளான இஸ்ரேலிய ராணுவத்தினர் வடக்கு இஸ்ரேலில் குடியிருப்புகளைப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இஸ்ரேலின் திபெரியாஸ், ஹைஃபா, ஆக்ரே நகரங்களில் ராணுவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு ஹிஸ்புல்லா அமைப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் தெற்கு லெபனானிலுள்ள ஐ.நா அமைதிப்படை தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் இரு அதிகாரிகள் படுகாயமடைந்ததாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் கொல்லப்பட்டு, 168 பேர் படுகாயமடைந்ததாகவும் லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில் தற்போது வரை 2,229 பேர் கொல்லப்பட்டு 10,380 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: காய்கறிகளை இப்படித்தான் பத்திரப்படுத்த வேண்டும்!
மகளிர் பாதுகாப்பு, வானிலை தகவல் பகிர்வு: தவெக மாநாட்டுக்கு குழுக்கள் அமைப்பு!
புதுசு புதுசா நடக்குதே… சஹாராவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி!
வானில் வட்டமடித்த விமானம்: என்ன நடந்தது? எப்படி தரையிறக்கப்பட்டது?
10 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!