இஸ்ரேல் தாக்குதல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாகவும், 85 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் இன்று (அக்டோபர் 3) தெரிவித்துள்ளது.
பாலீஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பு மற்றும் லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த ஓரண்டாக நவீன ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரண்டு அமைப்புகளைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும், குழந்தைகள், பெண்கள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டனர். 96,625 பேர் காயமடைந்துள்ளனர்.
அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 1ஆம் தேதி இரவு இஸ்ரேல் நாட்டின் டெவிவ் நகர் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது ஈரான் ராணுவம் . மேலும் ’பதில் தாக்குதல் நடத்தினால், அதற்கு உக்கிரமாக பதிலடி கொடுப்போம்’ என எச்சரிக்கையும் விடுத்தது.
இந்த நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையத்தில் பச்சூராவில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா மீட்பு மையத்தை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் நேற்று இரவு விமானத் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளும், இஸ்ரேலிய ராணுவத்தினரும் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 85 பேர் காயமடைந்தனர் என லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் 6 இஸ்ரேல் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் மற்றும் ஈரானை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு அமெரிக்கா தொடர்ந்து தனது தீவிர ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பணி!