இவங்களுக்கு என்ன தான் ஆச்சு என்பது போல, ‘வாரத்திற்கு 70 மணி நேரம் வேலைசெய்ய வேண்டும் என்று இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதே போன்று, வாரத்தின் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மனைவியின் முகத்தை எவ்வளவு மணி நேரம்தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? என்றும் L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்திய தொழில் உலகத்தில் உயரிய இடத்தில் இருக்கும் இருவரின் இந்த கருத்துகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து மதுரை சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் முதல் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வரை என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2025 நிகழ்ச்சியில் உரையாற்றிய மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மஹிந்திராவும் வேலை நேரம் குறித்து தனது பதிலடியை கொடுத்துள்ளார்.
அவர் பேசுகையில், “நடந்துகொண்டிருக்கும் விவாதம் தவறானது. ஏனென்றால், அது வேலை நேரத்தின் அளவை மட்டும்தான் வலியுறுத்துகிறது.
நாராயண மூர்த்தி மற்றும் பிறர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே இதைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். ஆனால் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். இந்த விவாதம் தவறான திசையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
எனது கருத்து என்னவென்றால், நாம் வேலையின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலையின் அளவு அல்ல. எனவே வேலை செய்வது 48 மணிநேரமா, 40 மணிநேரமா, 70 மணிநேரமா, அல்லது சுமார் 90 மணிநேரமா என்பது என்பது முக்கியம் அல்ல.
நான் சமூக ஊடகங்களில் இருப்பது, நான் தனிமையில் இருக்கிறேன் என்பதால் அல்ல. என் மனைவி அற்புதமானவர், நான் அவரைப் பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன். அதற்காக அதிக நேரம் செலவிடுகிறேன். எனவே, நான் புதிய நண்பர்களைப் பெறுவதற்காக சோஷியல் மீடியாவுக்கு வருவதில்லை. இது ஒரு அற்புதமான வணிகக் கருவி” என்று ஆனந்த் மஹிந்திரா கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்தின் மிக வயதான கோயில் யானை உயிரிழப்பு… பக்தர்கள் சோகம்!
’சாகும் வரை மறக்கமாட்டேன்’ : ரசிகர்கள் முன்னால் மீண்டும் மாஸ் கம்பேக் கொடுத்த விஷால்
நாளை முதல்வர் தொடங்கி வைக்கும் சென்னை சங்கமம்… எந்த இடத்தில் எந்த நிகழ்சிகள்… முழு விவரம்!