is rahul gandhi flying kiss to smriti rani

’பிளையிங் கிஸ் கொடுத்தாரா ராகுல் காந்தி?’: புகாரும்… மறுப்பும்!

அரசியல் இந்தியா

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு பிளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பெண் எம்.பிக்கள் அளித்த புகாரினை காங்கிரஸ் மறுத்துள்ளது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி மணிப்பூர் கலவரம் குறித்து ஆவேசமாக பேசினார்.

ராகுல் காந்தி பேசும் போது பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டதால் பாதியிலேயே உரையை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி புறப்பட்டார்.

அப்போது பாஜக எம்.பிக்கள் கோஷம் எழுப்பிய நிலையில், அதை பார்த்த ராகுல் காந்தி அவர்களை பார்த்து ப்ளையிங் கிஸ் கொடுப்பது போன்ற செய்கையை செய்தார் என்று மத்திய அமைச்சர் ஷோபா கரண்டலஜே குற்றஞ்சாட்டினார்.

அவருடன் 21 பாஜக எம்பி.க்கள் கையொப்பமிட்ட புகார் கடிதம் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை பார்த்துதான் ராகுல் காந்தி ’பிளையிங் கிஸ்’ கொடுத்ததாகவும் சிசிடிவியில் பதிந்துள்ள காட்சிகளின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பெண் எம்.பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அந்த புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் பெண் எம்.பி.க்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், காந்தியின் “அநாகரீகமான சைகை” குறித்து, அவர் பெண்களை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர்.

“எனக்கு முன் பேச வாய்ப்பளித்தவர் வெளியேறும் முன் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண்கள் மீது வெறுப்பு கொண்ட ஆணால் மட்டுமே பெண் எம்.பி.க்கள் அமரும் நாடாளுமன்றத்தில் பிளையிங் கிஸ் கொடுக்க முடியும். ராகுல்காந்தியின் செயல் கண்ணியமற்றது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி மீதான இந்த குற்றச்சாட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது.

“ராகுல் காந்தி வெளியேறும் போது சபாநாயகர் இருக்கையை நோக்கி நன்றி தெரிவிக்கும் விதமாக தான் சைகை (பிளையிங் கிஸ்) காட்டினார். அது எந்த ஒரு குறிப்பிட்ட உறுப்பினரை நோக்கியும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “மணிப்பூரின் முழுமையான செயலற்ற தன்மை மற்றும் தவறான கையாளுதல் குறித்து ராகுல் காந்தி மத்திய பாஜக அரசிடம் முக்கியமான கேள்விகளை கேட்டார். அந்த கேள்விகளை கொஞ்சம் கூட அரசாங்கம் கவனிக்கவில்லை.

இது போன்ற சமயங்களில் எல்லாம் வரலாற்றில் நடந்த நிகழ்வுகளுக்குச் செல்வதன் மூலமோ அல்லது தொடர்பில்லாத விஷயங்களைப் பேசுவதன் மூலமோ அதைத் திசைதிருப்ப முயற்சி செய்கிறார்கள். அதைதான் இன்றும் செய்துள்ளனர். இது தான் பாஜகவின் தந்திரம்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அசோக் குமார் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாத யாத்திரையா? ஷூட்டிங்கா? ராக்கெட் ராஜாவின் ரவுசு எதற்காக?

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *