பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு?

இந்தியா

பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால் அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக இருக்கும் என்று நோபல் பரிசு குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே இன்று(மார்ச் 16) தெரிவித்துள்ளார்.

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்படுகிறது. அறிவியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி என பல்வேறு பிரிவுகளில் இந்த விருது ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நோபல் பரிசு குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

is nobel peace prize 2023 for pm modi?

அவர் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், “அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி.

இன்று உலகில் உள்ள அமைதியின் மிகவும் நம்பகமான முகமாக பிரதமர் மோடி இருக்கிறார். போரிடும் நாடுகளுக்கு இடையே போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவர் மோடி.” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்திய பிரதமரின் தீவிர ரசிகர் என்று தன்னை அறிவித்துகொண்ட டோஜே, “பிரதமர் மோடி செயல்படுத்திய கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணமாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

is nobel peace prize 2023 for pm modi?

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான அவரது பங்களிப்பை பாராட்டி மதிப்புமிக்க சியோல் அமைதி பரிசு கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

உலக அமைதி மற்றும் அதிகார சமநிலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களை பாராட்டும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சியோல் அமைதி பரிசு வழங்கப்படுகிறது.

இந்த பரிசு பெற்றவர்களில் பலர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். எனவே இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பிரதமர் மோடி பெற பெரும் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

”நாட்டிற்கு எதிராக நான் பேசவில்லை”: ராகுல் காந்தி

IND vs AUS : முதல் ஒரு நாள் போட்டி… வான்கடே மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!

+1
0
+1
4
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *