IRCTC website down

IRCTC இணையதளம் முடக்கம்: ரயில்வே அட்வைஸ்!

இந்தியா

பொதுவாக ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்வதற்கு பலரும் இந்திய ரயில்வே துறையின் IRCTC இணையத்தளத்தை தான் பயன்படுத்துகின்றனர்.

தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த செயலி இன்று (ஜூலை 25) திடீரென முடங்கியது. இதனால் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் IRCTC இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில்,  இணையதளம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய CRIS நிபுணர் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும், பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய மேக் மை ட்ரிப், அமேசான் போன்ற செயலிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறுவுறுத்தியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

குறைந்தது தங்கம் விலை!

மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *