லெபனானில் செப்டம்பர் 27 இரவு தெற்கு பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அவர் பதுங்கியிருந்த பங்கர் மீது 60 முதல் 80 டன் வெடிகுண்டுகளை வீசி இஸ்ரேல் அழித்தே போட்டு விட்டது.
ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டாலும், அதற்கு அத்தனை ஆதரவையும் ஈரான் நாடுதான் அளித்து வருகிறது. அந்த ஈரானில் இருந்துதான் ஸ்பை இஸ்ரேலுக்கு ஹசன் நஸ்ருல்லா இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை பிரெஞ்சு நாளிதழான லா பெர்சியன் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் பூமிக்கு அடியிலுள்ள தலைமையகத்தில் ஹசன் நஸ்ரல்லா பல முக்கிய தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக ஸ்பையிடம் இருந்து தகவல் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது.
இதையடுத்து,கச்சிதமாக காரியத்தை முடித்த இஸ்ரேல் சரியாக நேற்று காலை 11 மணிக்கு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உலகத்தை விட்டு அகற்றப்பட்டார் என்று எக்ஸ் பதிவு வழியாக தெரிவித்தது . ஹசன் நஸ்ருல்லாவின் மறைவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மென்மையான போக்கை தாண்டி ஆக்ரோஷத்தை காட்ட தொடங்கியதும், ஹிஸ்புல்லா அமைப்பு தடுமாறத் தொடங்கி விட்டதாகவும் போர்க்கள நிபுணர்கள் கூறுகின்றனர் . ஈரான் தலைவர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொடர்ந்து, ஈரான் தலைவர் அயோதுல்லா கோமேனி தலைமையில் அவசர கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது.
தற்போது, ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக எக்சிகியூட்டிவ் கவுன்சில் தலைவராக இருந்த ஹாசீம் சைஃபதீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொல்லப்பட்ட தலைவருக்கு தம்பி முறை உறவு ஆவார்.
ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் யூனிட் 910 என்ற பிரிவு களத்தில் இறக்கப்பட்டதாக தெரிகிறது. யூதர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்த இவர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“மதவாத, பாசிச அரசியலுக்கு எதிராக தொடர்ந்து களமாடுவேன்”… மனோ தங்கராஜ்
‘தல’ தப்பியது … இறங்கி வந்த பிசிசிஐ… சிஎஸ்கே நிம்மதி!
திராவிட மாடலை நம்புங்கடா🤣🤣🤣