பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து சாகசங்களை கண்டு ரசித்தார். பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி 14 ஆவது கண்காட்சி இன்று(பிப்ரவரி) துவங்கியது.
எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
17-ந் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் 98 நாடுகளைச் சேர்ந்த 110 நிறுவனங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து 701 நிறுவனங்கள் என மொத்தம் 811 நிறுவனங்களுக்கு பங்கேற்றுள்ளன.
251 ஒப்பந்தங்கள் மூலமாக சுமார் 7,500 கோடி ரூபாய் வணிக ஒப்பந்தம் இந்த கண்காட்சி மூலமாக இந்திய நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியை பிரதமர் துவங்கி வைத்த பிறகு முதலில் மூன்று கிரண் எம் கே ஹெலிகாப்டர்கள் தேசிய கொடியை கொண்டு திரங்கா வியூகத்தில் பறந்து சென்றும்,
4 எம் 17 ஹெலிகாப்டர்கள் விமான கண்காட்சியின் கொடியை ஏந்தியவாறு துவஜ் வியூகத்தில் பறந்தும் சாகசத்தில் ஈடுபட்டன.
பின்பு கடலோர பாதுகாப்பில் ஈடுபடும் மூன்று மார்க் 3 ஹெலிகாப்டர்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் மூன்று ரக மார்க் 4 ருத்ரா ஹெலிகாப்டர்கள்,
அதிக உயரத்தில் பறக்கும் தன்மை கொண்ட இலகு ரக பிரசன்ட் ஹெலிகாப்டர்கள் மூன்று,
மார்க் 2 வகை சாரங் ஹெலிகாப்டர்கள் பறந்து வந்து இந்திய விமானப்படையின் கம்பீரத்தை பறைசாற்றியது.
பின்பு 5 விமானங்கள் (ஹாக் போர் விமானம், ஐ ஜே டி ஜெட் பயிற்சி விமானம், எச் டி டி பயிற்சி விமானம்) வெண் புகையை கக்கியவாறு குருகுல வியூகத்தில் பறந்து வந்தது.
இதில் இந்திய விமானப்படை தளபதி வி ஆர் சௌத்ரி ஒரு விமானத்தை இயக்கி வந்தார்.
அதை தொடர்ந்து ருத்ரா வியூகத்தில் அதிநவீன இலகு ரக விமானம் மத்தியில் இருக்க அதன் இருபுறமும் இரண்டு சுகாய் 30 இரண்டு மிக 29 ரக விமானங்கள் கம்பீரத்துடன் பறந்து வந்தன.
பின்பு அர்ஜுனா வியூகத்தில் முதன்முறையாக இரண்டு ரபேல் விமானம் இடம்பெற்றது.
ரபேல் உடன் இந்த வியூகத்தில் மிக் 29, ஜாக், எம் 2000 போர் விமானங்கள் பறந்து சென்றன.
பின்பு இந்தியாவின் அதிநவீன இலகு ரக தேஜஸ் ஜெட் விமானங்கள் பறந்து சென்ற பிறகு திரிசூல் வியூகத்தில் சுகாய் 30 ரக விமானங்கள் பறந்து சென்று பிரமிக்க வைத்தன.
கலை.ரா
மீண்டும் குறைந்தது தங்கம் விலை!
சிக்கிம்: அதிகாலையில் நிலநடுக்கம்!