காலமும் நேரமும் பொன் போன்றது. காலத்தின் அருமையை உணர்ந்தவர்கள் சாதனையாளர்கள்.
அப்படிப்பட்ட சாதனையாளர்தான் இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவிய நாராயண மூர்த்தி. இன்றைய இளம் தலைமுறையினரின் கனவு கம்பெனிகளில் ஒன்று இன்ஃபோசிஸ்.
2013ல் நடத்தப்பட்ட கேம்பஸ் ட்ராக் டெக்னாலஜி ஸ்கூல் சர்வேயில் மாணவர்கள் பணியில் சேர விரும்பும் நிறுவனங்கள் வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தொடர்ந்து இன்போசிஸ் இரண்டாம் இடத்தை பிடித்தது.
அந்தளவுக்கு உலகின் டாப் ஐடி நிறுவன ஜாம்பவானாக இருக்கிறது இன்ஃபோசிஸ்.
பெங்களூருவைத் தலைமையிடமாக கொண்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கி வரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உண்டு. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 80 பில்லியன் டாலர் ஆகும்.
இன்று உலகமே அறியும் இன்ஃபோசிஸ் 1981ஆம் ஆண்டு அடிக்குமாடி குடியிருப்பில் வெறும் ஒற்றை அறையில் தொடங்கப்பட்டது.
வெறும் 7 பொறியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்று மொத்தம் 3,35,000 பேர் வேலை செய்கின்றனர்.
வெறும் 10,000 ரூபாயில், அதுவும் தனது மனைவி சுதா மூர்த்தி சேமித்து வைத்திருந்த பணத்தைக் கடனாக வாங்கி இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கியவர் நாராயண மூர்த்தி. அப்படிப்பட்ட நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 800 கோடி டாலர்.
இப்படி இன்ஃபோசிஸ் நிறுவனம் வளர்ச்சியடைய முக்கிய காரணம் நாராயண மூர்த்தி கடைப்பிடித்த நேரம்தான்.
நாராயண மூர்த்தி தவறாமல் நேரத்தை கடைப்பிடித்தது குறித்து மனிகண்ட்ரோல் ஊடகத்தின் பேட்டியாளர், தினமும் காலை 7 மணிக்கெல்லாம் எப்படி அலுவலகத்துக்குச் சென்றீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த நாராயண மூர்த்தி, “7 மணியல்ல, காலை 6.20 மணிக்கெல்லாம் சென்றுவிடுவேன். இரவு 8-9 மணி வரை அலுவலகத்திலேயே இருப்பேன். 2011ல் நான் ஓய்வு பெறும் வரை இதையேதான் கடைப்பிடித்தேன்.
இல்லாத ஒன்றை உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு அதிக உழைப்பு, அதிக ஈடுபாடு, நிறையத் தியாகங்கள் தேவை.
தொழில்முனைவோராக வர வேண்டும் என்றால் தியாகமும், துணிச்சலும் அவசியம். சிறிய வெற்றிகள் உங்களுக்கு ஆற்றல், உற்சாகம், நம்பிக்கை, மகிழ்ச்சி போன்றவற்றைத் தரும்” என்று கூறியுள்ளார்.
தனது வெற்றிக்காக தன் குடும்பத்தினர் செய்த தியாகம் குறித்துப் பேசியுள்ள நாராயண மூர்த்தி, “ என் குழந்தைகள் அக்ஷத்தா, ரோஹன் ஆகியோர் எனக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார்கள்.
அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டதில்லை. சீக்கிரமாக வீடு திரும்பும் நாட்களில் மட்டும் அவர்களை அவர்களுக்குப் பிடித்த இடத்துக்கு அழைத்துச் செல்வேன்.
குழந்தைகள் வீட்டுப்பாடம் முடித்ததும் பெங்களூருவில் உள்ள மேக் ஃபாஸ்ட் உணவகத்துக்கு அழைத்துச் செல்வேன். அங்கு இருவரும் விரும்பியதைச் சாப்பிடுவார்கள்.
மற்றபடிஎனது மனைவிதான் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டார். என் குழந்தைகள் பி.எச்டி படித்தது. அவர்கள் வளர்ந்த விதம் என அத்தனை பெருமைகளும் தன் மனைவியை மட்டுமே சாரும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியா
திருடுபோனதா பயணிகளின் தகவல்: ரயில்வே சொல்வது என்ன?
புத்தாண்டுக்கு காவல்துறை போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்!