இன்ஃபோசிஸுக்கு அதிகபட்ச அபராதம் விதித்த அமெரிக்கா: எத்தனை கோடி தெரியுமா?
விசா முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா அதிகபட்ச அபராதத்தை விதித்துள்ளது.
பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்தியா உள்பட 22 நாடுகளில் உள்ள இந்நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் சுமார் 1.4 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் தனது ஊழியர்களுக்கு ஹெச் 1பி விசாக்களுக்குப் பதிலாக பி-1 பார்வையாளர் விசாக்களை வழங்கி பணியில் அமர்த்தி விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் விசா முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதற்காக கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.283 கோடி (34 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 283 கோடி ரூபாய் அபராதத் தொகையின் ஒரு பகுதியாக ரூ.238 கோடியை செலுத்த இன்ஃபோசிஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுவே ஆகும். அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டினர், ஹெச் 1-பி விசா அனுமதி பெற்று பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: பள்ளிகளுக்கு விடுமுறை முதல் அதிமுக போராட்டம் வரை! !
கிச்சன் கீர்த்தனா: வரகு அரிசி அடை!
”நிலச்சரிவில் 7 பேர் பலியானது துயரமான சம்பவம்” : நேரில் ஆய்வு செய்த உதயநிதி உருக்கம்!
கண்கலங்க செய்த திருவண்ணாமலை நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட 7 பேர் பலி… 4 பேரின் உடல்கள் மீட்பு!
புரோ லீக் கபடி : தமிழ் தலைவாஸ் கதை முடிந்தது!