இன்போசிஸ் இணை நிறுவனர் மீது எஸ்.சி/எஸ்.டி வழக்கு!

Published On:

| By Kumaresan M

இன்போசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 16 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களுரு சதாசிவ நகர் பகுதி காவல் நிலையத்தில் கடந்த 27 ஆம் தேதி போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “நான் இந்திய அறிவியல் கழகத்தின் (ஐஎஸ்எஸ்சி )தொழில்நுட்பப் பிரிவில் பணி புரிந்தேன் கடந்த 2014ஆம் ஆண்டு தான் பணியில் இருந்தபோது போலியாக சித்தரிக்கப்பட்ட பாலியல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டேன். அப்போது சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு எனக்கு நடந்தது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டை கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியார் உள்ளிட்ட 14 பேர் மீதும் சுமத்தியுள்ளார் துர்காப்பா. புகார் சொல்லப்பட்ட 16 பேர் மீதும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் நடந்த போது, ஐஎஸ்எஸ்சி கழகத்தின் அறங்காவலராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இருந்தார். இது தொடர்பாக இந்திய அறிவியல் கழகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கிரிஷி கோபாலகிருஷ்ணனும் எந்த விளக்கம் தரவில்லை.

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் 3வது உயரிய விருதான பத்மபூசன் விருது கிரிஷ் கோபால கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மெட்ராஸ் ஐஐடியில் படித்தவர்.

இவர் 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியாகவும் 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இன்போசிஸ் துணை தலைவராகவும் இருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share