இந்தோனேசியாவின் ஜாவா வடக்கு கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (ஏப்ரல் 14) ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான துபானுக்கு வடக்கே 96.5 கிமீ தொலைவில் நடுக்கடலில் இன்று மாலை 3:25 மணியளவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கே சுரபயா நகருக்கு அருகே நடுக்கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 594 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.
இதனையடுத்து சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என இந்தோனேசியாவின் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகளை சுரபயா, துபான், டென்பசார் மற்றும் செமராங் ஆகிய பகுதிகளில் வலுவாக உணரப்பட்டதாக இந்தோனேசியாவின் பேரிடர் முகமையின் செய்தித் தொடர்பாளர் முஹாரி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றுலா தீவுகளான ஜாவா மற்றும் பாலி ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வலுவான நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அச்சத்தில் கட்டிடத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
எனினும் அங்கு ஏற்பட்டுள்ள கடுமையான சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்தவித அறிக்கைகளும் இதுவரை வெளியாகவில்லை.
கிறிஸ்டோபர் ஜெமா
’நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால்..’: அண்ணாமலைக்கு சீமான் சவால்!
ஆர்எஸ்எஸ் பேரணி: டிஜிபி உத்தரவு!