நாக்பூரில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அவசரக் கால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாக்பூரில் இருந்து மும்பைக்கு கடந்த ஜனவரி 24 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் இண்டிகோ 6இ 5274 என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் வானில் இருந்து தரையிறங்கத் தயாராகியது.
அப்போது விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பிரனவ் ராவத் என்ற பயணி அவசர கால கதவை திறக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து, விமானத்தில் இருந்த பணியாட்கள் அவசரக்கால கதவைத் திறக்க முயன்ற பயணியை எச்சரித்துள்ளனர்.
இது குறித்து இண்டிகோ நிர்வாகம், விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போதே அவசரக் கால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது காவல்துறையில் புகார் அளித்தது.
ஐ.பி.சி பிரிவு 336 கீழ் விமான பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மும்பை விமான நிலைய போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.
மேலும், விமானத்தில் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது இண்டிகோ நிர்வாகம்.
கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு 6இ 7339 என்ற இண்டிகோ விமானம் ரன்வேயில் இருந்த போது விமானத்தின் அவசரக் கால கதவைப் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி தேஜஸ்வி சூர்யா திறந்தார் என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையிலும் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
அதிமுக பிரச்சனை: நம்பிக்கை வைக்கும் முத்துசாமி
திமுக எம்.பி.க்கள் கூட்டம்: ஆலோசித்தது என்ன?
தேஜஸ்வி மீது வழக்கு பதிய வில்லை அதான் அரசியல். சங்கி என்றைக்கும் ஆபத்து