IndiGo decides to buy 500 planes!

500 விமானங்களை வாங்க இண்டிகோ முடிவு!

இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை தொடர்ந்து “இண்டிகோ” விமான நிறுவனம் 500 விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விமான சேவையில் அதிக விமானங்களை இயக்கி வரும் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் நாள் ஒன்றுக்கு 1,800 விமானங்களை இயக்கி வருகிறது.

இதில் 10 சதவீத விமானங்கள் சர்வதேச பயணத்திற்கு பயன்படுத்தப்படும் நிலையில் சர்வதேச பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் 500 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக  இண்டிகோ நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுடனான ஏர் இந்தியாவின் சமீபத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது சேவையை துருக்கி உட்பட பல ஐரோப்பிய இடங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இண்டிகோவின் சர்வதேச விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா, செய்தி நிறுவனமான ANI-க்கு அளித்த பேட்டியில்,

விமான நிறுவனம் துருக்கிய ஏர்லைன்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும், மேலும் துருக்கி மற்றும் ஐரோப்பாவின் பிற இடங்களுக்கு மேலும் விரிவாக்க முயற்சியில் 500 விமானங்களை ஆர்டர் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

2030ம் ஆண்டுக்குள் 500 விமானங்களும் இண்டிகோ நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுப்பதாகவும், விமான சேவைகள் ஏற்பட்டுள்ள போட்டியில் முக்கிய மைல் கல்லை எட்டும் வகையில் இண்டிகோ நிறுவனம் விமானங்களை ஆர்டர் செய்துள்ளதாக கூறினார்.

கலை.ரா

முதல்வரை சந்தித்த அன்புமணி: பேசியது என்ன?

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: குற்றவாளிகளுக்கு 15 நாள் சிறை!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0