குஜராத்தை மையமாக வைத்துத் தொடங்கிய அமுல், பரந்துவிரிந்து, தனது பொருள்களை உலக நாடுகள் முழுக்க விற்பனை செய்கிறது.
இருப்பினும், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பலமாக இருந்ததால், அமுலால் இங்கு காலூன்ற முடியாதநிலை இருந்தது. இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் 10.10 டன் பால்… அதாவது 4.57 சதவிகிதம் பால் தமிழ்நாட்டில் உற்பத்தியாவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
ஆனால், சமீபகாலமாக ஆவின் செயல்பாடு படுமோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் அமுல் தனது விற்பனை நிலையங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமைக்க தொடங்கியது. இதற்கிடையே, உலகின் மிகச்சிறந்த உணவு தயாரிப்பு நிறுவனங்களில் இடம் பிடித்து அமுல் சாதித்துள்ளது.
அதாவது, Brand Finance’s Global Food & Drinks வெளியிட்டுள்ள தர மதிப்பில் அமுல் நிறுவனம் 100 புள்ளிகளுக்கு 91 புள்ளிகள் பெற்றுள்ளது. தற்போது, 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2023-ஆம் ஆண்டை விட 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அமுல் நிறுவனம் இந்திய பால் சந்தையில் 75 சதவிகிதத்தையும் வெண்ணெய் சந்தையில் 85 சதவிகிதத்தையும் பாலாடை கட்டி சந்தையில் 66 சதவிகிதத்தையும் கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் முன்னுரிமை, விளம்பரங்கள் உள்ளிட்ட 35 காரணிகளை கொண்டு நிறுவனத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளதாக Brand Finance’s Global Food & Drinks அமைப்பின் இயக்குநர் சேவியோ டி சவுசா தெரிவித்துள்ளார். பட்டியலில் முதலிடத்தில் நெஸ்லே உள்ளது. குளிர்பானங்கள் பிரிவில் கோகோ கோலா முதலிடத்தை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நையாண்டி மேளம் முழங்க அதிர்ந்த திரையரங்கம்… ‘வாழை’ படத்துக்கு மாஸ் ரிசப்ஷன்!
மோடிக்கு பிறகு யார்? ரேசில் முந்தும் அவர்!