ஆண்ட பரம்பரையை அரள வைத்த இந்தியர்கள்… லண்டனை கைப்பற்றியது எப்படி?

Published On:

| By Kumaresan M

லண்டனில் வெள்ளை இன மக்களை விட இந்தியர்கள் அதிக சொத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் மட்டும் 19 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் லண்டனில் மட்டும் 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.

இந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த சொத்துக்களை ஆய்வு செய்யும் அமைப்பான Barratt London லண்டனில் வெள்ளையின மக்களை விட அதிகமாக இந்தியர்கள் சொத்து வைத்திருப்பதாக கூறியுள்ளது.

இவர்களில், இந்திய வம்சாவளி, என்.ஆர்.ஐ-க்கள், இந்தியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் அடங்குவார்கள். லண்டனில் ஒரு படுக்கை அறை கொண்ட வீடு, இரு படுக்கை அறை கொண்ட வீடு, 3 படுக்கை கொண்ட வீடுகளை இந்தியர்கள் 2,90,000 பவுண்டு முதல் 4,50,000 பவுண்டு வரை கொடுத்து வாங்குகின்றனர்.

இந்தியர்கள் பலர் குடும்பம் குடும்பமாக படிப்பு , வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக லண்டனுக்கு குடி பெயர்கின்றனர். லண்டனில் சொத்து வாங்குவது இந்தியர்களுக்கு விருப்பமானதாக உள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூட லண்டனில் பிரமாண்ட வீடு வாங்கியுள்ளார். ஓய்வுக்கு பிறகு தனது குடும்பத்துடன் லண்டனுக்கு குடியேற அவர் முடிவு செய்துள்ளார்.

கொரோனாவுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா, லண்டனில் ரூ.1,446 கோடி மதிப்புடைய வீட்டை 2023 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.

Aberconway House என்ற பெயர் கொண்ட இந்த வீடுதான் லண்டனிலேயே இரண்டாவதாக அதிக விலை மதிப்பு கொண்ட வீடாகும்.

நிலம் வாங்க 20% அளவில் சலுகை வழங்கப்படுவதால், இந்தியர்கள் லண்டனில் அதிக அளவில் வீடுகளை வாங்கி குவிக்கின்றனர். லண்டனில் மேஃபேர், பெல்கிரேவியா, ஹைட்பார்க், மேரிலேபோன் மற்றும் செயின்ட் ஜான்ஸ்வூட் ஆகிய இடங்கள் இந்தியர்களின் விருப்பமான பகுதிகளாக உள்ளன.

இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் 21 சதவீதத்தினர், வெளிநாடுகளில் சொத்துகள் வாங்குகின்றனர். இவர்களில் 79 சதவீத பேருக்கு இங்கிலாந்து முக்கிய தேர்வாக உள்ளது.

இங்கிலாந்தின் நிலையான பொருளாதார வளர்ச்சியும் இந்தியர்கள் லண்டனில் சொத்துக்களை வாங்கி குவிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டு காலம் ஆண்டனர். தற்போது, தலைகீழாக மாறி பிரிட்டனின் தலைநகரை இந்தியர்கள் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.குமரேசன்

டெல்லி தேர்தல்: GOAT விஜய் ஆக மாறிய கெஜ்ரிவால்

ராணுவத்தில் சேவை: இந்தியாவின் 100வது கோடி குழந்தையின் நாட்டுப்பற்று!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share