எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் முதலிடம்!

Published On:

| By Monisha

Indians are the first to get H-1B visa

அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவு பயன் அடைந்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.

இதற்கிடையே அமெரிக்காவில் 2022ஆம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 20,791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72.6 சதவிகிதமாகும்.

இதற்கு அடுத்தபடியாக சீனாவைச் சேர்ந்த 55,038 பேரும் (12.5 சதவிகிதம்), கனடாவைச் சேர்ந்த 4,235 பேரும் (ஒரு சதவிகிதம்) எச்-1பி விசா பெற்றுள்ளனர். இதில் ஆரம்ப வேலைக்கான எச்-1பி விசாக்கள் மற்றும் விசா நீட்டிப்புகள் ஆகியவை அடங்கும்.

ஒட்டுமொத்தமாக 2022ஆம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2021ஆம் நிதியாண்டில் 3.01 லட்சம் இந்தியர்கள் எச்-1பி விசா பெற்றனர். கடந்த நிதியாண்டில் 3.20 லட்சம் பேர் விசாக்கள் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்கள். பல ஆண்டுகளாக 70 சதவிகிதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள்.

ஆண்டுக்கு ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பெறுவது உயர்ந்தபடி இருக்கிறது. அதேவேளையில் சீனர்கள் எச்-1பி பெறுவது 0.1 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது.

ராஜ்

‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தின் டீசரை வெளியிடும் தோனி

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் பக்கோடா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel