ஆரம்பமே இப்படியா? கடும் வீழ்ச்சியில் பங்குச்சந்தை!

உலக பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு மற்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரிகள் காரணமாக, இந்திய பங்குச் சந்தை கடந்த 8 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை கடும் சரிவை சந்தித்தன.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மொத்தமாக சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவு இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் மீண்டும் எழுந்ததுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர் .

அமெரிக்க பங்குச் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Amazon, Intel & Snapchat நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து நிலையில் Intel நிறுவனம் டிவிடெண்ட்டை நிறுத்தி வைப்பதாகவும், 15% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வேலைவாய்ப்பின்மை குறியீடு 2021 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 4.3% அதிகரித்ததை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குசந்தையில் எதிரொலித்து Dow Jones, Nasdaq & Russell 2000 குறியீடுகள் வரை வீழ்ச்சியடைந்தன. அமேசான் நிறுவனம் 11% வரையும் , Intel நிறுவன பங்குகளின் மதிப்பு 30% வரையிலும் வீழ்ச்சியடைந்தன.

ஜப்பான் மத்திய வங்கி அறிவித்த வட்டி விகிதத்தை மாற்றம் காரணமாக ஜப்பான் Yen வலுவடைந்து கடந்த 3 வார உச்சமாக டாலருக்கு நிகரான Yen மதிப்பு 8% வரை உயர்ந்தது.

டாலருக்கு எதிராக ஜப்பான் & சுவிஸ் Franc போன்ற நாடுகளின் நாணய மதிப்பு உயரந்து வரும் வேளையில் இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது.

உலக அளவிலான இந்த சரிவின் காரணமாக வெள்ளிக்கிழமை காலை முதல் அமர்வில் கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தை, வர்த்த நாள் முழுவதும் சரிவுடனே இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 885 புள்ளிகளும் நிஃப்டி 293 புள்ளிகளும் சரிவை கண்டன.

நிஃப்டி மிட்கேப் 576 புள்ளிகளும், நிஃப்டி ஸ்மால்கேப் 79 புள்ளிகளும், பேங்க் நிஃப்டி 213 புள்ளிகளும் சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ஒரு டாலர் 83.75 ரூபாயாக உள்ளது.

சென்செக்ஸில் உள்ள முதல் 30 நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி பங்குகள் தலா 4 சதவீதம் வரை நஷ்டமடைந்தன. டாடா ஸ்டீல் நிறுவனம் 3 சதவீதம் சரிந்தது. லார்சன் & டூப்ரோ, டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை காலை முதலே சரிவுடன் பயணித்தது.

மேலும், Divi’s Lab (+1.74%), HDFC Bank (+1.17%), Dr Reddy’s (+0.84%), Sun Pharma (+0.80%), and Britannia (+0.63%) பங்குகள் உயரந்தும் Eicher Motors (-5.15%), Tata Motors (-4.32%), Maruti Suzuki (-4.06%), JSW Steel (-3.91%), and Hindalco (-3.89%) நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன.

அதானி என்டெர்பிரைசஸ் லிமிடெட் AEL நிறுவனத்திடம் இருந்து FMCG துறையில் உள்ள அதானி வில்மரின் (AWL) நிறுவனத்தை தனியாக பிரிக்க குழு ஒப்புதல் அளித்த நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பிஎஸ்இயில் AEL பங்கு 10 சதவீதம் உயர்ந்து 381.30 ஆக முடிவடைந்தது.

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் கடந்த ஆண்டில் ஈட்டிய 1,970 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டு ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிகர லாபம் 19.7 சதவீதம் உயர்ந்து ரூ.2,358 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

Zomato நிறுவனம் கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய 2 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.253 கோடி ரூபாய் ஈட்டியதாக தெரிவித்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் Zomato பங்கு விலை 19 சதவீதம் உயர்ந்து புதிய சாதனையாக ரூ.278.45 வரை உயர்ந்தது.

“உலகளவிலான நிச்சயமற்ற பொருளாதார மந்தநிலை வரும் வாரங்களில் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றத்தை பாதிக்கலாம். மேலும் இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகளை எதிர்பார்த்த அளவு வளர்ச்சியை எட்டாதததன் காரணமாக கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த பங்குச் சந்தை குறியீடுகள் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.

வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை அறிவிப்புகள் மற்றும் Bharti Airtel, BEML, ONGC, NHPC, LIC, and MRF நிறுவன காலாண்டு முடிவுகள் அறிவிக்க உள்ளதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் வெளியேற வாய்ப்புகள் உள்ளதன் காரணமாக சில்லறை முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடுகளை மேற்கொள்வது நல்லது” என்று பங்குச் சந்தை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5 திங்கள்கிழமை காலை முதல் அமர்வில் பலவீனமான உலகளாவிய குறிப்புகள் காரணமாக இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பெருத்த சரிவுடன் துவங்கியது. சென்செக்ஸ் 3247 புள்ளிகளும் நிஃப்டி 414.85 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Bharti Airtel, Bharti Hexacom, ONGC, Honeywell Automation, Deepak Nitrite, Devyani International, Marico உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.

பல்வேறு செய்திகள் காரணமாக LIC Hsg Fin, Zomato, Infosys, JSW Steel, Adani, Power Mech Projects, Gland Pharma, SJVN, Ashoka Buildcon, Dee Development, Savita Oil, Jay Bharat Maruti, SBI உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று திங்கட்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

மணியன் கலியமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘மழை பிடிக்காத மனிதன்’ பஞ்சாயத்து… தீர்த்து வைத்த நாட்டாமை சரத்குமார்

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி!

கோவை மேயர் வேட்பாளர் ரங்கநாயகி?

TNPL 2024: முதன்முறையாக கோப்பையை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்

Stock Market News Today

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts