கொரோனா தாக்கம்: கலக்கத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்திய பங்குச்சந்தை இன்று (டிசம்பர் 22) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கைககளில் சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியதற்கு பிறகு, பெரும்பாலான துறைகளின் பங்குச்சந்தைகளில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.
மேலும், தற்போது சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளவர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர்.
இன்று அமெரிக்க பங்குச்சந்தை ஏற்றம் அடைந்ததால், உள்நாட்டு பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் ஏற்றத்துடன் துவங்கிய மும்பை பங்கு சந்தை வர்த்தகம், 10 மணியளவில் சரிவை சந்தித்தது.
அதன்படி, 10.20 மணி நிலவரப்படி நிஃப்டி 0.20 சதவிகிதம் குறைந்து 18,161.55 புள்ளிகளாக உள்ளது. சென்செக்ஸ் 0.19 சதவிகிதம் சரிந்து 60,937.70 புள்ளிகளாக உள்ளது.
மருத்துவத்துறை தவிர மற்ற அனைத்து துறைகளும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, UPL, Axis Bank, Tata Motors ஆகியவற்றின் பங்குகள் 1.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளன.
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அடுத்த சில தினங்களுக்கு மருத்துவம், சுகாதாரத்துறை தொடர்பான பங்குகள் மட்டுமே அதிகரிக்கும் என்று மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மோதிலால் ஓஸ்வாஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் கேம்கா தெரிவித்துள்ளார்.
செல்வம்
”தோனி எப்பவுமே மாஸ் தான்” புகழ்ந்து தள்ளிய சச்சின்
மகனுக்கு நிச்சயதார்த்தம்: திடீரென உயிரிழந்த முன்னாள் எம்.பி!