டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக 23 ரயில்கள் இன்று (ஜனவரி 12) தாமதமாக இயக்கப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் ஆண்டின் துவக்கம் முதல் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் குளிர் அலை வீசுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப்,பீகார் போன்ற மாநிலங்களில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.
டெல்லியில் 1.8 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவுகிறது. இதனால் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மற்றும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படுகிறது. ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதுடன், அதிக அளவு பனி பொழிவு ஏற்படுவதால் ரத்து செய்யப்படுகிறது.
இந்தநிலையில், தென் மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் 23 ரயில்கள் கடும் பனி மூட்டம் காரணமாக தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து தலைநகர் டெல்லிக்கு செல்லும் ரயில் 8 மணி நேரம் தாமதமாகவும், ஹைதராபாத்திலிருந்து இயக்கப்படும் ரயில் 1 மணி நேரம் தாமதமாகவும், விசாகப்பட்டினத்திலிருந்து செல்லும் ரயில் 8 மணி நேரம் தாமதமாகவும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
கோல்டன் குளோப் விருது வென்ற கீரவாணி தமிழில் இத்தனை படங்களுக்கு இசையமைத்துள்ளாரா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!