ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் 235 இந்தியர்கள் இன்று (அக்டோபர் 14) டெல்லி திரும்பினர்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்குள்ள பல அடுக்கு மாடி குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உணவு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் காசா பகுதியில் தடைப்பட்டுள்ளது.
இந்தசூழலில் இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரேல் நாட்டில் உள்ள 212 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களில் 21 தமிழர்கள் டெல்லி விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் கோவை வந்தனர்.
இந்தநிலையில் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இன்று 235 இந்தியர்கள் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தனர். இதில் 29 பேர் தமிழர்கள். வெளியுறவுத்துறை அதிகாரிகள் பயணிகளை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி: முதல் இடத்தில் தொடரும் ஆதிக்கம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!