பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் நேற்று (அக்டோபர் 20 ) ராஜினாமாவை அறிவித்த நிலையில் தற்போது பிரதமர் பதவிக்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் லிஸ் ட்ரஸ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அதனையடுத்து உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதில் இந்திய வம்சாவளியான 42 வயதான ரிஷி சுனக்கிற்கு அதிக வாய்ப்புள்ளதாகத் கூறப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சியில் பாராளுமன்ற அமைச்சராக இருக்கும் ரிஷி சுனக், முன்னாள் அதிபர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவை அடுத்து கட்சியில் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்காக லிஸ் ட்ரஸ்யை எதிர்த்துப் போட்டியிட்டவர்.
அதில் அவர் தோல்வியை அடைந்த நிலையில் தற்போது அவருக்கு கட்சியில் ஆதரவு அதிகரித்து வருகிறது.
கட்சியில் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். நேற்றிலிருந்து “ரெடிபார் ரிசி “ என்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சி கமிட்டியின் தலைவரான கிரஹாம் பிராடி தற்போது கட்சியின் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
இந்த மாதம் 31 ஆம் தேதி நிதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதற்குள் கட்சியின் தலைவர் தேர்ந்துத்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வரும் அக்டோபர் 28 தேதி பிரிட்டனின் புதிய பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கேதர்நாத்தில் மோடி : என்னென்ன திட்டங்கள்?
இம்ரான் கான் 5 ஆண்டு தேர்தலில் நிற்க தடை!